தமிழ் மக்களிடம் டக்ளஸ் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்புக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனையும், சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

இதேநேரம், மட்டக்களப்பில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.