நாடளாவிய ரீதியில் எதிர்வரும் தினங்களில் அதிகளவிலான மழைபெய்யுமென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு மேற்கு , சப்ரகமுவ , தெற்கு மற்றும் வடமேற்கு ஆகிய மாகாணங்களில் அதிகளவிலான மழைவீழ்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் இன்று பகல்வேலைகளில் இடியுடன் கூடிய  75 மில்லி லீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகுமென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.