அரசியலில் இருந்து ஓய்வுபெறபோவதில்லை என அறிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டிசம்பரின் பின்னர் புதிய நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொலனறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நான் நல்ல உடல்நலத்துடன் உள்ளதால் நான் ஓய்வுபெறவேண்டிய தேவையில்லை என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டிற்கான திட்டத்தை என்னால் சிறப்பாக முன்னெடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் அறிவிக்காததால் நான் காணாமல்போய்விடுவேன் என சிலர் எதிர்பார்க்கின்றனர் என சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனினும் நான் டிசம்பரிற்கு பின்னர் இந்த நாட்டிற்கான மற்றொரு நடவடிக்கையில் ஈடுபடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.