இலங்கை உள்­ளிட்ட தெற்­கா­சிய நாடு­களின் மனித உரி­மைகள் நிலை குறித்த கேள் அமர்வு ஒன்றை அடுத்த மாதம் நடத்­த­வுள்­ள­தாக, அமெரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் தெற்­கா­சி­யா­வுக்­கான உப குழுவே இந்த அமர்வை நடத்­த­வுள்­ளது.

அமெ­ரிக்க காங்­கி­ரஸின் வெளி­வி­வ­காரக் குழு உறுப்­பி­னர்கள் மத்­தியில், தெற்கு மத்­திய ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான பதில் உதவி இரா­ஜாங்கச் செயலர் அலிஸ் வெல்ஸ் கடந்த வாரம் பேசி­யி­ருந்தார்.

இதன்­போது, ஒக்­டோபர் மாதம் தெற்­கா­சி­யாவின் மனித உரி­மைகள் நிலை­மைகள் குறித்த திறந்த கேள் அமர்வு ஒன்றை நடத்­து­வது குறித்தும் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இந்த கேள் அமர்வில்  இலங்கை, பாகிஸ்தான், இந்­தியா, மியன்மார் உள்­ளிட்ட நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.