நேரலையை முடக்கியது அரசு – பெரும் கலக்கத்தில் ஐக்கிய தேசிய கட்சி

தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மேளன நேரலையை தேர்தல்கள் ஆணைக்குழு நிறுத்தியுள்ளது.

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்கு நேரடியாக சென்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அதிரடியாக ஒளிபரப்பினை நிறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இலவசமாக அரச தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேரடி ஒளிபரப்பிற்கு கட்டணங்கள் எதுவும் செலுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்த அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

ரூபவாஹினிக் ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகள் அனைவரும் அழைக்கப்பட்டதுடன், இது தேர்தல் சட்டத்தை மீறும் செயல் என குறிப்பிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கையால் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.