நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் படி வவுனியா புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயம் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

பரீட்சைக்கு தோற்றிய 56 மாணவர்களில் 32மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். 

தனியார் கல்வி நிலையங்களை நாடாது பாடசாலை கல்வியை மட்டும் பெற்றமை சிறப்பம்சமாகும்.

அனைத்து மாணவர்களும் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். இதற்காக உழைத்த ஆசிரியர்கள் திருமதி.ச.மங்களவதனா செல்வி. குவேனி அதிபர்.திருமதி கமலாம்பிகை சொக்கலிங்கம் மற்றும் பாடசாலை ஆசிரியர்களுக்கு பெற்றோர் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர்.

வவுனியா மாவட்டத்தில் குறிப்பாக வடக்கு வலயத்தில் தொடர்ந்து ஆறாவது வருடமாக முதலிடத்தை தக்க வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .

மேலும் அதிகூடிய புள்ளியாக 192 புள்ளிகளை செல்வி தரணியா விவேகானந்தராசா பெற்றுள்ளார்.