இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நபம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பிரதான கட்சிகள் மற்றும் சிறு கட்சிகளும் சுயேச்சை உறுப்பினர்களும் தேர்தலுக்காக தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில் 2019 ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் திகதி இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது.  

இன்று காலை  9.00 மணி தொடக்கம்  11.30 மணிவரையில்  தேர்தல்கள் ஆணையக  அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன. அத்துடன்  வேட்புமனு தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும்  காலை 9.00 மணியிலிருந்து 11.30 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னர்  ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவிப்பார்.

இன்றைய தினம்  வேட்புமனு தாக்கல்  நிகழ்வு அனைத்து தொலைக்காட்சி அலைவரிவைகளிலும் நேரடியாக ஒளிப்பரப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.