புத்தளத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வன்முறையின் போது ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆனமடுவ பகுதி நேற்று முன்தினம் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பன்னல பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சுனெத் புஞ்சிஹேவா என்ற 33 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் ஆடிகம பிரதேசத்தில் நின்ற போது, அங்கு வந்த குழுவினருக்கு இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அது பாரிய மோதலாக மாறியுள்ளது.

மோதலில் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். திடீரென மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சுனெத் என்பவர் கீழே விழுந்த போது, அவர் மீது தொடர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.