வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளிலும் மலை­ய­கத்­திலும் வாழும் தமிழ்­மக்கள் தமது வாக்

­கு­களை சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு ஏற்­க­னவே வழங்­கி­விட்­டார்கள் என்றே கூற­வேண்டும். இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் வட, கிழக்கு மாகா­ணங்­களில் சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு ஆத­ர­வாக 90 சத­வீ­த­மான வாக்­குகள்  பதி­வாகும். அதே­போன்று வட – கிழக்கு மாகா­ணங்­களில் தேர்தல் பிர­சா­ரத்­திற்­கான விஜயம் மேற்­கொள்­ள­வி­ருக்கும் சஜித் பிரே­ம­தா­ஸ­வுடன் இணைந்து அந்த மாகா­ணங்­களில் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் தலை­வர்கள் அனை­வரும் மேடை­யே­று­வார்கள் என்று கல்வி இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் தெரி­வித்தார்.

புதிய ஜன­நா­யக முன்­ன­ணி­யினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த பெண்கள் மாநாடு நேற்று திங்­கட்­கி­ழமை கொழும்­பி­லுள்ள சுக­த­தாஸ உள்­ளக அரங்கில் நடை­பெற்­றது. அந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது:

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்­கி­யி­ருக்கும் சஜித் பிரே­ம­தா­ஸவே நவம்பர் 16 ஆம் திக­தியின் பின்னர் இந்­நாட்டின் ஜனா­தி­பதி என்­பதை உறு­தி­யாகக் கூறிக்­கொள்ள விரும்­பு­கின்றோம். அதே­வேளை இந்த நாட்டில் பல்­வேறு விதங்­க­ளிலும் பெண்கள் புறக்­க­ணிக்­கப்­பட்­டு­வந்த நிலையில், அவர்­களை வலு­வூட்டும் வித­மாக இந்த பெண்கள் மாநாடு அமைந்­துள்­ளது என்­ப­தையும் குறிப்­பிட வேண்டும்.

போரை முடி­விற்குக் கொண்டு வந்­த­தாகக் கூறு­ப­வர்கள் கடந்த காலத்தில் வட, கிழக்கில் எமது மக்­களைக் கொன்­றொ­ழித்­ததைத் தவிர வேறெ­த­னையும் செய்­ய­வில்லை. கடந்த அர­சாங்­கமே வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு போதைப்­பொ­ருட்­களைக் கொண்­டு­செல்­வ­தற்கு வழி­வ­கை­களை ஏற்­ப­டுத்திக் கொடுத்­த­துடன் அதனால் குற்­றச்­செ­யல்­களும் அதி­க­ரித்­தன.

எனினும் கடந்த 2015 ஆம் ஆண்டில் நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சி­ய­மைத்த பின்னர் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் படை­யினர் வச­மி­ருந்த காணிகள் பெரு­ம­ளவில் விடு­விக்­கப்­பட்­டன. பாலியல் வன்­பு­ணர்­வுகள், சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு வடக்கு – கிழக்கு மாகா­ணங்­களே கடந்த காலத்தில் தாரை­வார்த்துக் கொடுக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் 2015 ஆம் ஆண்டின் பின்னர் பெண்கள் மற்றும் சிறு­வர்­க­ளுக்­கான பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. வீட­மைப்புத் திட்­டத்தின் கீழ் வட,கிழக்கு மாகா­ணங்­களில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடுகள் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸ­வி­னா­லேயே நேர­டி­யாகப் பய­னா­ளி­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டன. குறு­கிய காலத்தில் வேலை­வாய்ப்­புக்கள் அதி­க­ரிக்­கப்­பட்­டன. தற்­போது நாட்டில் வெள்ளை வான் கலா­சாரம் இல்லை.

இந்­நி­லையில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளிலும் மலை­ய­கத்­திலும் வாழும் தமிழ்­மக்கள் தமது வாக்­கு­களை சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு ஏற்­க­னவே வழங்­கி­விட்­டார்கள் என்றே கூற­வேண்டும். எதிர்­வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வட, கிழக்கு மாகா­ணங்­களில் சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு ஆத­ர­வாக 90 சத­வீ­த­மான வாக்­குகள் பதி­வாகும் என்­பதில் எவ்­வித மாற்­றுக்­க­ருத்­துக்­களும் இல்லை. எனவே ஏனைய வேட்­பா­ளர்கள் தமது வாக்­கு­களைப் பூச்­சி­யத்­தி­லி­ருந்து எண்ண ஆரம்­பிக்­கும்­போது, சஜித் பிரே­ம­தாஸ 20 சத­வீ­தத்­தி­லி­ருந்தே எண்ணத்தொடங்குவார். சஜித் பிரேமதாஸ நவம்பர் மாதம் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு தேர்தல் பிரசாரத்திற்காக விஜயம் மேற்கொள்ளவிருக்கிறார். அதன்போது அம்மாகாணங்களில் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் தலைவர்கள் அனைவரும் சஜித் பிரேமதாஸவுடன் ஒன்றிணைந்து மேடையேறுவார்கள் என்பதை தமிழ் மக்களின் சார்பில் உறுதியுடன் கூறிக்கொள்கின்றேன் என்றார்.