திருகோணமலை கடற்படைத்தளத்தில் இரகசியமாகச் செயற்பட்டுவந்த நிலக் கீழ் சித்திரவதை முகாம் தொடர்பான தகவல்களை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது International Trust and Justice Project (ITJP) என்ற சர்வதேசச அமைப்பு.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற் புலிகளின் தளபதி சூசை அவர்களின் மனைவி சத்தியதேவி மற்றும் பிள்ளைகள் இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பித்துச் சென்ற வேளையில், சிறிலங்கா கடற்படையினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்கள்.

அவ்வாறு கைதுசெய்யப்பட்ட சூசை அவர்களின் மனைவி பிள்ளைகள் இந்த திருகோணமலைக் கடற்படை இரகசிய முகாமிலேயே நீண்ட காலம் தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது ITJP அமைப்பு.

அதேபோன்று, சிலங்காவில் மிகப் பெரிய இராணுவப் புரட்சியை மேற்கொண்டிருந்த ஜே.வீ.பி. என்ற ஜாதிக விமுக்தி பெரமுனவின் தலைவர் றோகன விஜேவீர சிறிலங்கா படைகளால் கொல்லப்பட்ட பின்னர், றோகன விஜேவீர அவர்களின் மனைவி சிறிமதி சித்ராங்கி, அவரது நான்கு பெண் பிள்ளைகள் மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகள் இந்த திருகோணமலை கடற்படை தளத்திலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.