தான் ஜனாதிபதியானால் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார்.

இந்த அறிவித்தல் காரணமாக ஐக்கிய தேசிய கட்சிக்குள் பல முரண்பாடுகளை ஏற்பட்டுத்தியுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஜித்தின் அறிவிப்பினால் அதிருப்தி அடைந்த சமகால பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விசுவாசிகள், கோத்தாய அணியில் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இதற்கமைவாக அரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் நடைபெற சில நாட்கள் உள்ள நிலையில் ஏனைய கட்சி உறுப்பினர்களை தம்முடன் இணைந்துக் கொள்ள பொதுஜன பெரமுன கட்சி ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிய வருகிறது.

தம்முடன் இணைவோருக்கு தொகுதி அமைப்பாளர் பதவிகளை வழங்குவதில் உள்ள சிக்கல் நிலைமையே இதற்கான காரணம் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.