யட்டியாந்தோட்டை கணேபல்ல தோட்டத்தில் நேற்று இரவு இடம்பெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்த எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.

சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச விசாரணைக்குப் பணித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்கள் நாளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, யட்டியாந்தோட்டை கணேபல்ல தோட்டத்தில் அமைந்துள்ள குடியிருப்பினுள் நுழைந்த சிலர், நேற்று இரவு தோட்ட மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அத்துடன், மக்களின் உடைமைகளுக்கும் சேதம் விளைவித்திருந்தனர்.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்திற்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை எனவும், மது போதையில் இருந்த சிலரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.