இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச நாளைய தினம் அநுராதபுரத்தில் வைத்து பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உடுவே தம்மாலோக தேரர் தனது முகப்புத்தக பக்கத்தின் ஊடாக குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அனுராதபுர, ருவன்வெலி மகா தூபி முன்பாக, கோத்தபாய ராஜபக்ச புதிய ஜனாதிபதியாக நாளைய தினம் பதவியேற்கவுள்ளார்.

அதேவேளை, தேர்தல் முடிவுகள் இன்று மாலைக்குள் அறிவிக்கப்பட்டு விடும் என்றும், இன்று மாலையே புதிய ஜனாதிபதி பதவியேற்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.