புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த சம்பந்தன்

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வாழ்த்தினை தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சமபந்தன் எம் பி.

இருவருக்குமிடையில் நடந்த தொலைபேசி உரையாடலின்போது இந்த வாழ்த்தினை தெரிவித்தார் சம்பந்தன்.

திருகோணமலையில் இருந்து கொழும்பு திரும்பிய பின்னர் நேரடியாக சந்தித்துப் பேசலாமென ஜனாதிபதி கோட்டா ,இதன்போது சம்பந்தனிடம் தெரிவித்தார் என்றும் அறியமுடிந்தது.