முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இலங்கையின் பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவருக்கான நியமனக் கடிதத்தினையும் வழங்கி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் 3.00 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.