ஜனாதிபதி மாளிகை அல்லது எந்தவொரு உத்தியோகபூர்வ இல்லங்களை பெற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ நடவடிக்கைக்காக மாத்திரம் ஜனாதிபதி மாளிகையை ஜனாதிபதி பயன்படுத்தவுள்ளார்.

அதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னமும் மிரிஹான பகுதியில் உள்ள சொந்த வீட்டிலேயே தங்கியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்குவதற்காக கொழும்பு, மஹகமசேகர மாவத்தையில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை பெற்றுக் கொண்டார்.

பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் தனக்கு கிடைத்த உத்தியோகபூர்வ இல்லத்தில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.