இந்தியா – பாகிஸ்தான் மோதல் இலங்கையை பாதிக்கும்

இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் மோதல் ஏற்பட்டால் அது எமது நாட்டுக்கும் பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ரிவித்தார்.

ஆகையால் எமது நாட்டு தலைவர்கள் தலையிட்டு இரு நாடுகளுக்குமிடையில் சமாதானத்தை ஏற்படுத்த முடியுமாக இருந்தால் அது முழு உலகத்துக்கும் செய்த பாரிய சேவையாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டாடர்.

இந்திய பாக்கிஸ்தான் நாடுகளுக்கிடையில் மோதல் இடம்பெறலாம் என்ற அச்சநிலையில் இலங்கை எவ்வாறான நிலையை கடைப்பிடிக்கவேண்டும் என்பது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.