இந்தியா பாக்கிஸ்தான் இடையே ஏன் போர் தொடங்கியது? இதோ வரலாறு

இந்தியா பாக்கிஸ்தான் இந்த இரண்டு நாடுகளின் பெயரை கேட்ட உடனே எல்லாரும் சொல்வது அல்லது நினைப்பது அந்த இரண்டு நாடுகளுக்கும் ஒத்துவராது, இரண்டு நாடுகளும் மாத்தி மாத்தி சண்ட போடுவாங்க என்பதுதான்.

இது கிரிக்கட்டாக இருக்கட்டும், அரசியலாக இருக்கட்டும் மற்றது இராணுவமாக இருக்கட்டும் எல்லா இடத்திலும் இந்தப் பிரச்சினை போய் சேர்ந்துகிட்டு தான் இருக்கு 

ஒரு சாதாரண இந்தியன் பாகிஸ்தானியரை  சந்திக்கவில்லை  என்றாலும், சாதாரண பாகிஸ்தானியர்  இந்தியரை சந்திக்கவில்லை என்றாலும் இந்த இரண்டு நாடுகளில் உள்ள பிரஜைகளுக்கு யார் என்றே தெரியாமல் ஒரு மிகப்பெரிய கோபம் இருந்து கொண்டுதான் இருக்கு.

இந்த இரண்டு நாடுகளுக்கும் என்னதான் பிரச்சினை என்றால் யாருக்குமே தெரியாது. அந்த இரண்டு நாடுகளுக்கும் என்னதான் பிரச்சினை என்று முதல் 11 சுவாரசியமான விடயங்களைப் பார்ப்போம்.

 • இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லையை நாங்கள் இரவு நேரத்திலும் ஆகாயத்திலிருந்து பார்க்க முடியும். அது எப்படியென்றால் இந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் இந்திய பக்கம் 1,50,000 அதி வெளிச்ச மின் விளக்குகள் காணப்படும். அதாவது கிரிக்கட் போட்டியின் போது மைதானத்தை சுற்றி போடப்படும் அதே மின் விளக்குகள் 1,50,000 அந்த இந்திய எல்லையில் காணப்படுகிறது.      அதே நேரம் பாக்கிஸ்தான் பக்கத்திலும் அவ்வளவு மின் விளக்குகள் போடப்பட்டு இருக்கின்றது.

        இவ்வளவு மின் விளக்குகள் இருப்பதால் நல்           இரவிலும் ஆகாயத்தில் இருந்து பார்க்கும் போது அவ்வளவு பிரகாசமாக இருக்கும். அவ்வளவு ஆபத்தான எல்லை. உலகிலேயே ஆபத்தான எல்லை என்றால் அது இந்தியா பாக்கிஸ்தான் எல்லைதான். அவ்வளவு எல்லை வெளிச்சதிலும் இரண்டு நாடுகளின் தீவிரவாதிகள் மற்றும் இராணுவத்தினர் மாறி மாறி ஊடுருவிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

 • நாம் வாழும் இந்த காலகட்டத்தில் அதாவது 2019 ஆண்டில் போர் என்பதை உலக நாடுகள் விரும்புவது இல்லை. காரணம் வீண் பண செலவுதான். ஆகவேதான் இது இப்போது பொருளாதார பிரச்சினையை நோக்கி செல்கின்றது. உலக பொருளாதர பட்டியலில் நூற்றுக்கணக்கான நாடிகளில் இந்தியா 57வது இடத்தில் காணப்படுகின்றது ஆனால் பாக்கிஸ்தான் 107வது இடத்தில் காணப்படுகின்றது. ஆகவே இந்த இரண்டுநாடுகளுக்கும் 50 நாடுகளின் இடைவெளி காணப்படுகின்றது. இதில் இருந்து இரண்டு நாடுகளிடையே உலக பொருளாதார பட்டியலில்  சிறந்த நாடு எது என்றால் அது இந்தியாதான். 
Sir சிரில் ராட்க்ளிஃப் 
 • இவ்வளவு காலமும் இந்தியா பாக்கிஸ்தான் சண்ட போடுவதற்கு காரணம் எல்லை பிரச்சினைதான். 70 வருடங்களுக்கு மேலாக இரண்டு நாடுகளும் சண்டை போடுவதற்கு காரணம் ஒரு நபர்தான் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம்  அது யார் என்றால் Sir சிரில் ராட்க்ளிஃப்  எனும் இவர் பிரித்தானியாவில் இருந்தவர் இவரை இந்தியா பாக்கிஸ்தான் எல்லையை பிரிக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசு இந்தியாவுக்கு அழைத்தது.  இவரை இந்தியாவுக்கு அழைத்த பின் பிரித்தானிய அரசு இவரிடம் சொன்ன விடயம் “ உங்களுக்கு 5 வாரகாலம் தருகிறோம் இந்த நாடுகளின் எல்லையை வரைந்து தர வேண்டும்” என்பது தான். அதற்கு அவரிடம் கொடுக்கப்பட்ட வரைபடங்கள்  பழைய கால படங்களே. இந்த படங்கள் 1947 படங்கள் கூட இல்லை அது மிகப் பழைய வரைபடங்கள் தான்.  இந்த படத்தை வைத்துக்கொண்டு பழைய காலத்து அறிவை பயன்படுத்தி  5 வாரங்களில் இவர்வரைந்த குத்துமதிப்பான வரைபடங்கள் தான் இன்று வரை இந்தியா பாக்கிஸ்தான் இடையே முறைகளை எற்றபடுத்துகின்றது. இவர் எது இந்தியா எது பாக்கிஸ்தான் எது முஸ்லிம்கள் வாழும் இடம் எது இந்துக்கள் வாழும் இடம் என்று தெளிவாக பார்த்து வரையாமல் இந்த இரண்டு மிகப்பெரிய நாடுகளின் எல்லையை வெறும் 5 வாரங்களில் அந்த இடங்களை சென்று பார்க்காமல் வெறும் ஒரு அறையில் இருந்து கொண்டு வரைந்தது தான் இவ்வளவுக்கும் காரணம். 
 • இந்தியா பாக்கிஸ்தான் 1947இல் இந்த நாடுகள் பிரிந்த பொழுது அங்கு இடப்பெயர்வு ஏற்ப்பட்டது. பாக்கிஸ்தானில் இருந்து இந்துக்கள் இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து முஸ்லீம் மக்கள் பாக்கிஸ்தானுக்குமாக 1 கோடியே 50 இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்து சென்றார்கள். இதுவே இப்பொழுது வரை உலகில் அதிகூடிய மக்கள் இடப்பெயர்வு செய்த வரலாற்று பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 
 • Sir சிரில் ராட்க்ளிஃப்  வரைந்த வரைபடம் வரைந்த காலம் ஆவணி மாதம் 17ம் நாள் 1947  பாக்கிஸ்தான் நாட்டிற்கு ஆவணி14 1947 சுதந்திரம் கிடைத்தது, இந்தியாவுக்கு ஆவணி15 1947 சுதந்திரம் கிடைத்தது. ஆனால் இவ் இரண்டு நாடுகளும் தங்களது சரியான எல்லை தெரியாது சுந்திரத்தை கொண்டாடி முடித்தார். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து இரண்டு நாட்களுக்கு பிறகுதான் சிரில் ராட்க்ளிஃப் வரைந்த வரைபடம் வெளிவந்தது. 
 • இந்திய நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி  அந்நாட்டு சுதந்திரத்திற்காக அதிகம் போராடியவர் இவர் சுதந்திரத்திற்கான எந்த ஒரு நிகழ்விலும் இவர் கலந்து கொள்ளவில்லை என்பதுதான் உன்மை. ஏன் என்றால் இந்தியா பாக்கிஸ்தான்  எல்லையை பிரிப்பதற்காக சுந்தரம் வாங்கி கொடுக்கவில்லை.  என்று உண்ணாவிரதம் இருந்தார் மகாத்மா காந்தி.
 • முன்னி சாய்பாபாத் எனும் ஊர் 1947 14ம் திகதி ஆவணிமாதம் பாக்கிஸ்தானுக்கு சுதந்திரம் கிடைத்த போது. மிகப்பிரமாண்டமாக பாக்கஸ்தான் கொடிகளை ஒவ்வொரு வீடுகளிலும் கட்டி கோலம் போட்டு கொண்டாடினார்கள். 15 ஆவணி 1947 பாக்கிஸ்தான் தான் கெத்து இந்தியா வெத்து என்று சொல்லிக்கொண்டு தங்களையும் பாக்கிஸ்தான் என்று நினைத்துக் கொண்டார்கள். ஆனால் ஆவணி 17ம் திகதி 1947 வரைபடம் வந்த பிறகு முன்னி சாய்பாபாத் பாக்கிஸ்தான் இல்லை இந்தியா என்று அறிவித்த பின் அவ் ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இது முன்னி சாய்பாபாத் மட்டும் அல்ல அந்த எல்லை பகுதிகளில் பல இடங்கள் இப்படி மாறி மாறி நினைத்துக்கொண்டார்கள். 
 • சம்மு காசுமீர் தங்களை தனிநாடு என்று அறிவித்தார்கள் தாங்கள் பாக்கிஸ்தானும் இல்லை இந்தியாவும் இல்லை என்று ஆனால் 17ம் திகதி ஆவணிமாதம் 1947 அது பெரிய இழுபறியாக மாறிவிட்டது. இது தான் இப்பொழுது வரை இந்தியா பாக்கிஸ்தான் நாடுகளிடையே போர் சூழலை உருவாக்கியுள்ளது. 
 • இந்தியா பாக்கிஸ்தான் நாடுகள் பிரிக்கப்பட்ட போது இரண்டும் புதிய வெவ்வேறு நாடுகள். அந்த கால கட்டத்தில் இந்தியாவிடம் மட்டுமே ரூபா நோட்டுக்கள் காணப்பட்டன. பாக்கிஸ்தான் ரூபா தோட்டங்கள் இல்லாத பட்சத்தில் ஒரு வருடத்திற்கு இந்தியாவின் ரூபா நோட்டுக்களை எடுத்து பாக்கிஸ்தான் முத்திரையைப் பதித்து பாவித்தனர். 1948 பின் தான் புதிய பாக்கிஸ்தான் ரூபா நோட்டுக்களை வெளியிட்டது பாக்கிஸ்தான்.
 • இந்தியா பாக்கிஸ்தான் இடையே கலவரம் வெடித்த காலகட்டத்தில் பிரத்தானிய இரானுவம் வெள்ளை மக்களை மட்டுமே பாதுகாத்தானர் இது பிரித்தானிய கட்டளை என்றும் கூறப்படுகின்றது. இந்திய பாக்கிஸ்தான் மக்களை பாதுகாக்க வேண்டாம் என்று கட்டளை கொடுத்தது பிரித்தானியா.
 • இந்தியா பாக்கிஸ்தான் கலவரத்தின் போது அக்கால புகையிரதங்கள் பிணங்களை மட்டுமே ஏற்றி சென்றதாக கூறப்படுகின்றது. இலட்ச கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ் இரு நாடுகளின் போர் பிரச்சினையே எல்லை மற்றும் இனம் என்பது தான் உன்மை.

இரண்டு நாடுகளும் அணுஆயுதம் கொண்டவை….