தமிழக ராணுவ வீரர் அபிநந்தனுக்கு பாகிஸ்தானில் என்ன நடந்தது? வெளியான பல உண்மைகள்

தமிழக ராணுவ வீரர் அபிநந்தன் இரண்டு தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்டார்.பின் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திடீரென அதிரடியாக அபிநந்தனை நேற்று இரவு இந்திய ராணுவத்திடம் ஒப்படத்தனர்.

ஆகையால் இந்த விடயம் மக்கள் மத்தியில் மிக பரபரப்பாக பேசப்பட்டது.ஆனால் அதில் பல வதந்திகள் பரவி வருகின்றது.ஆகையால் அவர் என்ன பேசினார் என்பது குறித்து உண்மை தகவல் வெளியாகியுள்ளது. 

அதில் குறிப்பிட்டது என்னவென்றால், “நான் எனது இலக்கை நோக்கி போக முயன்ற போது பாகிஸ்தான் விமான படை விமானியால் எனது விமானம் தாக்கப்பட்டது. 

எனது விமானம் தாக்குதலுக்கு உள்ளாகி விழுந்தது. நான் அதிலிருந்து தப்பி ஓட முயன்ற போது சிலர் கோபத்தோடு என்னை நெருங்கினார்கள்.

ஆனால் இரு அதிகாரிகள் வந்து என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றினார்கள். அதன்பின் முதலுதவிகளை செய்து என்னை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றார்கள். 

அவர்கள் எனக்கு எவ்வித துன்புறுத்தலையும் செய்யவில்லை. அவர்கள் மகாத்மாக்கள் போல என்னைக் கவனித்து உதவினார்கள். நான் அது குறித்து மகிழ்கிறேன்.

இதுவே உண்மை என அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் மீடியாக்கள் பலதரப்பட்ட கருத்து வருகிறது அதெல்லாம் உண்மை இல்லை என அவர் கூறியுள்ளார்.