விக்னேஸ்வரன் ஜெனீவாவிற்கு விஜயம்?

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்குவதை தடுக்கும் நோக்கில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜெனீவாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மேலதிக கால அவகாசம் வழங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவே, விக்னேஸ்வரன் ஜெனிவாவுக்குப் பயணமாகவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தற்போது இந்தியாவிற்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ளார். மகா சிவராத்திரிக்குப் பின்னரே அவர் நாடு திரும்புவார்.

அதன்பின்னரே, அவர் ஜெனீவாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.