ஜெனீவாவில் இலங்கை குறித்து ஆரம்பமான ஆலோசனை கூட்டம்

0
42

இலங்கை குறித்து ஜெனீவாவில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை தொடர்பான முதலாவது ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.ஜெனீவா மனித உரிமை பேரவையின் குழு அறையில் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 21ஆம் திகதி இலங்கை குறித்து முன்வைக்கப்படவுள்ள பிரேரணை குறித்தே இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் இதற்கு முன்பு இலங்கை தொடர்பில் கூறப்பட்ட விடயங்களும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை ஜெனீவா கூட்டத்தொடரில் இம்முறை இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் புதிய பிரேரணை ஒன்று வரப்போவதில்லை என தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here