புதிதாக திருமணம் செய்யும் இளைஞர் யுவதிகளுக்கு ஹோம் சுவீட் ஹோம் திட்டம்

புதிதாக திருமணம் செய்யும் இளைஞர் யுவதிகளுக்காக முன்மொழியப்பட்ட ஹோம் சுவீட் ஹோம் என்ற கடன் முன்மொழிவு எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நடைமுறைப்படுத்தும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முன்மொழிவு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் அதற்கான சிபாரிசுகள் அரச வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இம்முறை வரவு செலவு திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹோம் சுவீட் ஹோம் கடன் முறையின் கீழ் 6 சதவீத வட்டிக்கு 25 வருட காலத்துக்கு திருப்பி செலுத்த கூடிய வகையில் 10 லட்சம் வரையில் கடனை பெற்றுக் கொள்ள முடியும்