சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று!

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இன்று (28ஆம் திகதி) வௌியிடப்படவுள்ளன.

பெறுபேறு அடங்கிய ஆவணத்தைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

இன்று நண்பகலுக்கு முன்னர், பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk எனும் இணையத்தளத்தில் வௌியிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தடவை கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில், 6,56,641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.