யாழில் நடந்த மிகப் பெரும் பயங்கரம்!! ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிறுவன்

யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு நிலாவரைப்பகுதியில் தோட்டத்திலிருந்து வரும் வழியில் வெற்றுக்காணியில் இருந்த கைக்குண்டை விளையாட்டுப்பொருளென கருதி எடுத்த சிறுவன் அதனை வீதியில் எறிந்த போது வெடித்தது.

அதில் படுகாயமடைந்த சிறுவன், உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறுவன் எடுத்த எறிந்த பொருள் கைக்குண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது.

2009 யுத்தம் நிறைவடைந்த பின்னர் இப்படியான சம்பவங்கள் பல இடம் பெற்றுள்ளதுடன் இவை தொடர்பில் சரியான தெளிவு படுத்தல் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ள சிறுவன் ஆபத்தான நிலையில் இல்லை என்பதுடன் இச் சம்பவம் மிகப் பெரும் பயங்கரமானது என வைத்திய சாலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.