பூநகரி கௌதாரி முனையில் காற்றலை மற்றும் சோலார் மின் உற்பத்தி

பூநகரி கௌதாரி முனையில் காற்றலை மற்றும் சோலார் மின் உற்பத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் 2019/04/08 பூநகரி பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு.S கிருஸ்னேந்திரன் தலைமையில் மாலை 3.00 மணியளவில் இடம் பெற்ற இவ்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன்,கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரன் , முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு. த. குருகுலராஜா மற்றும் பூநகரி பிரதேச சபை தவிசாளர், உப தவிசாளர் உறுப்பினர்கள் பிரதேச அமைப்புகளின் பிரதி நிதிகள் ,கௌதாரிமுனை பிரதேச மக்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர்.

மற்றும் காற்றலை மின்சாரம் சோலார் மின்சாரம் உற்பத்தி தொடர்பான நிபுணர்கள் வருகை தந்தே இவ்விடயம் தொடர்பான விளக்கங்களை வழங்கினர்.

இக்கலந்துரையாடலின் போது காற்றலை மற்றும் சோலார் மூலமான மின்சார உற்பத்தியின் போது ஏற்ப்படும் சாதகங்கள் பாதகங்கள் பற்றி ஆராயப்பட்ட போது பின்வருமாறு கூறப்பட்டது ஆனால் இக்கூற்று எவ்வளவு உண்மை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

கௌதாரிமுனைக் காணியில் பொதுமக்களுக்கு சொந்தமான 130 துண்டு காணிகள் 521.75ஹெக்ரேயரும் அரசுக்கு சொந்தமான 78 துண்டு காணிகள் 496.67 ஹெக்ரேயரும் அடையாளம் காணப்படாத 80 துண்டு காணிகள் 685.46 ஹெக்ரேயர் நிலப்பரப்பு அபகரிக்கப்படவேண்டிய நிலையில் உள்ளது.

1) இவ் மின் உற்பத்தியில் காற்றலை மின்சாரம் மூலம் 250 MW ம் சோலார் மின் உற்பத்திமூலம் 150MW உற்பத்தி செய்ய முடியும்.

2) வேலைவாய்ப்பு.

நிலங்கள் துப்பரவு செய்வதற்க்கான வேலைவாய்ப்பு,காற்றாடி துப்பரவு செய்வதற்க்கான வேலைவாய்ப்பு, மற்றும் பொறியியல் தொடர்பானவர்கள் ஏனையவர்கள் அதாவது பல்கலை மாணவர்கள் மற்றும் தென்னிலங்கை சார்ந்தவர்கள்.

3) தனியாரிடம் இருந்து பெறப்படும் காணிகள் குத்தகை அடிப்படையில் பெறப்படுமாம்.

4) பிரதேச மக்களின் வாழ்வாதரங்கள் பாதிக்கப்பட்டால் நஷ்டஈடு வழங்குவதாம்.

பிரச்சினைகள் என்று கூறப்பட்டது.

1) மாதம் ஒன்றுக்கு 1-2 வரையான பறவைகள் இறக்க நேரிடும்.

பிரதேச மக்களால் ஆடையாளம் காணப்பட்ட தீமைகள்.

1) கண்டல் தாவரங்கள்,பிளாண்டன் தாவரங்கள் அழிவடையும்.

2) ஏனைய காடுகள் அழிவடையும்.

3) வெப்பம் அதிகரிக்கும்.

4) மழைவீழ்ச்சி இல்லாமல் போகும் நிலைமை உருவாகும்.

5)வெப்பம் அதிகரிப்பால் பவளப்பாறை, முருகைக்கல் சிதைவடையும்.

6) கடல் உணவுப்பொருள் உற்பத்தி ,இறால்,மீன் நண்டு என்பவனின் இனப்பெருக்கம் சிதைவடைந்து இல்லாமல் போணால் மீனவத் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

7) அதிக வெப்பம் காரணமாக பனைமரங்களின் வட்டு கருகும் நிலை ஏற்ப்படும்.

8)கால் நடைகளின் மேச்சல் பாதிக்கப்படும்.

9) பனம் பொருள் உற்ப்பத்தி குறைவடையும்.

10) நிலத்தடி நீர் உவர்நீராக மாறும் நிலைமை ஏற்ப்படும்.

காரணம்.

11) 1703 ஹேக்ரேயர் நிலப்பரப்பில் காள்றலை மின்விசிறியை பொருத்தும் போது ஆளமான கிடங்குகள் வெட்டி கட்டும் போது கடல் நீர் உள்வரக்கூடிய நிலைமை உருவாகும் என சந்தேகங்களை மக்கள் தெரிவித்தனர்

இரும்பினும் இப்பிரதே நிலங்களை காற்றலை,சோலார் மின்சார உற்ப்பத்திக்கு இவ் நிலங்களை பெறுவது தொடர்பான வர்த்தமானி 2014/04/17 ம் நாள் வெளியானது.

மற்றும் இவ் நில அபகரிப்பு தொடர்பாக பிரதே மக்களுக்கோ அல்லது மாகாண சபை பிரதிநிதிகளுக்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ தொரியாமலே இச்செயற்பாடு மேற்க்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது .

இவ் மின் உற்பத்தி நிலையங்களை அரசு தனியாரிடமே வழங்க திட்டம் உள்ளதாக கூறப்பட்டது.

அன்பான உறவுகளே!

கௌதாரி முனை காற்றலை மற்றும் சோலார் மின் உற்பத்தியால் ஏற்ப்படப்போகும் நன்மை தீமை தொடர்பான விபரங்கள் தெரிந்தவர்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு மக்களை தெளிவுபடுத்துவதுடன் மற்றும் பூநகரியின் இயற்க்கை வளங்களை பாதுகாக்கவும் முன்வாருங்கள்.