வடக்­கில் 4,142 ஏக்­கர் நிலம் படை­யி­ன­ரின் வசம் !!

0
57

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் 2 ஆயி­ரத்து 457 ஏக்­கர் தனி­யார் நிலமே படை­யி­ன­ரின் வச­மி­ருப்­ப­தாக அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்த தக­வல் தவ­றா­னது, உண்­மைக்­குப் புறம்­பா­னது என்­பது மாவட்­டச் செய­ல­கங்­க­ளின் புள்ளி விவ­ரங்­க­ளின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளின் நில விடு­விப்பு சம்­பந்­த­மான தற்­போ­தைய நிலைமை, மற்­றும் தீர்­வு­கள்­பற்றி மக்­கள் பிர­தி­நி­தி­கள், படை­யி­னர் இடை­யில் கடந்த 3ஆம் திகதி இடம்­பெற்ற வடக்கு கிழக்கு அபி­வி­ருத்­திச் செய­ல­ணி­யில் ஆரா­யப்­பட்­டது.

இதன்­போதே குறித்த அளவை அரச தலை­வர் தெரி­வித்­தார். எனி­னும், யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில் மட்­டும் 2 ஆயி­ரத்து 642 ஏக்­கர் நிலம் படை­யி­ன­ரின் வசம் உள்­ளது. மன்­னார் மாவட்­டத்­தில் 211 ஏக்­கர் நிலம் படை­யி­ன­ரின் வசம் உள்­ளது.

இதே­போன்று கிளி­நொச்சி மாவட்­டத்­தில் ஆயி­ரத்து 132 ஏக்­கர் நில­மும், முல்­லைத்­தீ­வில் 101 ஏக்­கர் தனி­யார் நில­மும் படை­யி­ன­ரி­டம் உள்­ள­தோடு வவு­னியா மாவட்­டத்­தில் 56 ஏக்­கர் தனி­யார் நிலம் படை­யி­ன­ரி­டம் உள்­ளது. இதன்­படி வடக்­கில் மட்­டும் 4 ஆயி­ரத்து 142 ஏக்­கர் நிலம் படை­யி­ன­ரி­டம் இருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ள

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here