பிரபல நடிகரும் அரசியல் பிரமுகருமான ஜே.கே.ரித்திஷ் மரணம்! திரையலகம் சோகம்

ஜே.கே ரித்திஷ் காணல் நீர், நாயகன், பெண் சிங்கம் படத்தில் நடித்தவர். அண்மையில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வந்து ஹிட்டான LKG படத்தில் அரசியல் வாதியாக நடித்திருந்தார்.

அதிமுக கட்சியில் இருந்த ரித்திஷ் முன்பு 15 வது லோக்சபா தேர்தலில் 2009 ல் திமுக சார்பில் போட்டியிட்டு ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.

இலங்கையின் கண்டியில் பிறந்து ராமேஸ்வரத்திற்கு பின் குடிபெயர்ந்தார். அவர் ஜோதீஸ்வரி என்பவரை கடந்த 2007 ல் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஆரிக் ரோஷன் என்ற மகன் இருக்கிறார்.

கட்சிக்காக நிறைய நேரம் ஒதுக்கிய ரித்திஷ் மாரடைப்பால் இன்று அவரின் சொந்த ஊரான ராமநாதபுரத்தில் காலமானார். அவருக்கு வயது 46. அவரின் மரணத்தால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரின் மறைவுக்கு சினிஉலகம் ஆழ்ந்து அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.