நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல் – தெமட்டகொடவிலும் குண்டுவெடிப்பு

சிறிலங்கா முழுவதும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்தே நாடு முழுவதும் ஊடரங்குச் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்னதாக கொழும்பு தெமட்டகொட பகுதியிலும் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து வரும் நிலையிலேயே அவசரமான ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சிறிலங்காவின் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன