வடக்கின் அரச அலுவலகங்கள் நாளை இயங்காது! வடக்கு ஆளுநர்

வடக்கு மாகாணத்தின் அனைத்து அலுவலகங்களுக்கும் விடுமுறை வழங்குமாறு வடக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் ஏற்பட்ட குண்டு வெடிப்பினை அடுத்து நாளைக் காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளையும் நாளை மறுநாளும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேபோன்று வடமாகாண சபைக்குட்பட்ட அனைத்து மாகாண அரச அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பணித்துள்ளார்.

வடமாகாண சபைக்குட்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை (22) விடுமுறை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.