வடமாகாணத்தில் சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் இல்லாதபோதும் இராணுவத்தினர் அத்துமீறல்!

நாட்டில் இடம் பெற்ற தொடர் குண்டுவெடிப்பு காரணமாக அவசர பயங்கரவாத தடுப்புச்சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டில் பல பகுதிகளில் முப்படையினரும் களத்தில் இறங்கி சோதனை நாடாத்தி வருகின்றனர்

இலங்கையில் தமிழர் செறிந்துவாழும் பகுதியாக வடமாகாணம் காணப்படுகின்றது. இங்கு பொய்யான தகவலின் அடிப்படையில் தமிழ்மக்களின் வீடுகள் விடுதிகள் என புலனாய்வு மற்றும் இராணுவம் சோதனையில் ஈடுபட்டுள்ளது. இது தமிழர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஈழத்தமிழர்கள் அச்சம் கொள்ளாது முப்படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். தவறான செயல்கள் எதுவும் ஏற்கப்படாதவாறு நாட்டை பாதுகாக்க வேண்டும்.

பொய்யான செயல்கள் யாரேனும் செய்தால் உடனே ஊடகங்களுக்கு தெரியப்படுத்துக்கள்.

நாட்டு மக்களுக்கு ஊடகங்களே தற்ப்போது பாதுகாப்பளிக்கின்றது.