இலங்கையில் இன்று மீண்டும் குண்டு வெடித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை – பொலிஸ்

இலங்கையில் இன்று மீண்டும் குண்டு வெடித்ததாக தகவல் வெளியான நிலையில், அது உண்மையில்லை எனவும் பொலிசார் சிறிய ரக வெடியை வெடிக்க வைத்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்பு வெள்வத்தை அருகே பூட்டிய வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டு உள்ளதா என பொலிசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது இருசக்கர வாகன பெட்டியை திறக்க முடியாததால் பொலிசார் சிறிய ரக வெடியை வைத்து வெடிக்க செய்தனர்.

அதன் பின்னரே இருசக்கர வாகனத்தில் வெடிகுண்டு இல்லாதது உறுதியானது.