எஸ்.பி.பி உயிரிழப்புக்கு சீனாவே காரணம்: சர்வதேச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

0

பிரபல முன்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உயிரிழந்தமைக்கு சீனாதான் காரணமென சர்வதேச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞரான சீனிவாச ராவ்,  மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் தீவிர ரசிகர் ஆவார்.

இந்நிலையில் சீனிவாச ராவ் சர்வதேச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “கடந்த 8 மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவின் பொருளாதாரம் சீர் குலைந்து விட்டது.

கொரோனா வைரஸை உருவாக்கி, பல நாடுகளுக்கு பரவச் செய்தது சீனாதான் என பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், இதுகுறித்து சீனா இதுவரை எந்த பதிலையும்  வழங்கவில்லை.

ஏற்கெனவே அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளை பொருளாதார ரீதியாக வலுவிழக்கச் செய்ய வேண்டுமெனும் எண்ணம் சீனாவிற்கு உள்ளது.

ஆகையால்தான் கண்ணுக்கு புலப்படாத நுண் உயிர் கொல்லியை உலகம் முழுவதும் சீனா பரவச் செய்துள்ளது. இதனால்தான் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.

எனவே சீனா மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.