விடுதலைப்புலிகள் அமைப்பை தோற்கடித்த அடுத்த கணமே தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டும்- சரத்வீரசேகர

127

விடுதலைப்புலிகள் அமைப்பை தோற்கடித்த அடுத்த கணமே தமிழ் தேசிய கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டுமென அமைச்சர் சரத்வீரசேகர தெரித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து  தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நாடாளுமன்ற அமர்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “உலகத்திற்கே அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாத அமைப்பை நாம் தோற்கடித்த பின்னர் அவர்களின் அரசியல் பிரிவான தமிழ்தேசிய கூட்டமைப்பையும் நாம் தடை செய்திருக்க வேண்டும்.

இதன் காரணமாக அவர்கள் இன்று, வெவ்வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுகின்றனர். தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு முன்னதாக பிரபாகரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தவர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.