அரசாங்கம் வழங்கிய வற் வரி நிவாரணத்தை இதுவரையில் பால்மாவுக்கு வழங்க வர்த்தகர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று வர்த்தக, நுகர்வோர் மற்றும் சேமநல அமைச்சு தெரிவித்துள்ளது.

வற் வரி நிவாரண அடிப்படையில் 400 கிராம் பால் மா பொதியின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள வர்த்தக, நுகர்வோர் மற்றும் சேமநல அமைச்சின் செயலாளர் ஜி.கே.எஸ்.என்.ராஜதாச, இது தொடர்பில் அடுத்த வாரம் ஆராய்வதற்கு நுகர்வோர் அதிகார சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிவாரணம் ஜனவரி மாதம் புதிய தயாரிப்புக்களுக்கு வழங்கப்படும் என்று பால்மா வர்த்தகர்கள் தெரிவித்திருந்தனர். 

ஆனால் இதுவரையில் விலை குறைக்கப்படவில்லை என்று செயலாளர் குறிப்பிட்டார்.