முகமூடிகளுக்கான விலையை கூட்டியது அரசாங்கம்!

N95 முகமூடிகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை அரசாங்கம் நிர்ணயித்துள்ளதாக சுகாதா அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி அதிகபட்ச சில்லறை விலையாக N95 முகமூடிகளுக்கு தலா 150 ரூபாவை நிர்ணயம் செய்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக முகமூடிகளுக்கான கேள்விகள் அரச மற்றும் தனியார் மருந்தகங்களில் எழுந்துள்ளது. இந் நிலையில் இதனை அடிப்படையாகக் கொண்டு விநியோகஸ்தர்கள் முக மூடிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அரசாங்கம் இவ்வாறு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்துள்ளது.

இதேவேளை நாட்டில் முகமூடிகளுக்கு நிலவும் பற்றாக்குறையை தீர்க்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.