சீனாவில் தற்போது, தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் சர்வதேச ரீதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில், இன்று மதியம் வரையிலான காலப்பகுதியில் 13 நாடுகளில் குறித்த வைரஸ் தாக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளது.

அதேவேளை, நேற்றைய ஆய்வின் முடிவில் 1,287 வழக்குகள் இது குறித்து பதிவாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸினால் பாதிப்படைந்த நாடுகளின் விபரங்கள் பின்வருமாறு,

தாய்வான் 3 பேர்,மெக்கோ 2 பேர்,தென்கொரியா 2 பேர்,அமெரிக்கா 2 ,வியட்நாம் 2 ,நேபாளம் 1,ஹொங்கொங் 5 ,தாய்லாந்து 5 ,அவுஸ்திரேலியா 4 ,பிரான்ஸ் 3 ,ஜப்பான் 3,மலேசியா 3 மற்றும் சிங்கப்பூரில் 3 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இந்நிலையில், சர்வதேச நாடுகள் தீவிர விழிப்புணர்வு நடவடிகைகளில் ஈடுபட்டு வருவதோடு , இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்கதில் பாதிப்படைந்து சிகிச்சைகள் பலனின்றி 41 பேர் வரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.