உண்மையில் நாம் குளிக்கும் காரணம் பல பேருக்கு தெரிவது இல்லை. எதற்கு குளிக்கிறோம் என்று யாரையாவது கேட்டால் உடலில் உள்ள அழுக்கு போகுவதற்கு குளிக்கிறோம் என்று சொல்வார்கள்.

அது ஒரு விடையாக இருந்தாலும் கூட, குளியல் என்பது குளிர்வித்தல் ஆகும். குளிர்வித்தலே மருவி குளியல் என்று காலப்போக்கில் மாறியது.

மனிதர்களுக்கு 75% நோய்கள் வர காரணம் மனித உடலில் உள்ள வெப்பம் தான்.

இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்த நீரில் குளிக்க வேண்டும்.

உடல் வலி இருக்கும்போது வெந்நீரில் குளித்தால் நல்லது. ஆனால், குளிர்ந்த நீரில் குளிப்பதுதான் மிகவும் நல்லது.

தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது வெந்நீரை பயன்படுத்தலாம்.

குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது.

நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலையில் ஊற்றி குளிக்க வேண்டும்.

காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.

நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழலும்.

குளத்தில் ஒவ்வொரு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறும்.

இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்திருக்கிறீர்களா?

உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

இது எதற்கு என்றால், உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இப்படி செய்வார்கள்.

எனவே உச்சியில் சிறிது நனைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மேலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறும்.

நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கிறது.

குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.

பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும். புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.

குளித்தல் என்பது அழுக்கு நீக்குவதோடு அல்லாமல் உடல் சூட்டை தணிப்பது ஆகும்.

காலை, மாலை இரு வேளை குளித்தாலும் மிகவும் சிறப்பு.