பிறந்த குழந்தையின் தலையை தடவிப் பார்த்தால் தலை உச்சியில் குழி இருக்கும். இதனை ஆங்கிலத்தில் ‘Fontanelle’ என்று அழைக்கின்றனர்.

இயற்கையிலேயே மிகவும் சிக்கலான மற்றும் அதிசயமான ஒரு பாகம் எது என்றால் அது மனிதனின் மூளைதான். மூளை தான் மனிதகுக்கு ஒரு சக்தி வாய்ந்த ஒரு கணினி. இப்படிப்பட்ட பொக்கிசமான மூளையை பாதுகாக்கத் தான் பரிணாம வளர்ச்சி நமக்கு மிகவும் பாதுகாப்பான கடினமான மண்டை ஓட்டினை கொடுத்துள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்ன என்று பார்த்தால் மனிதனின் மூளை மூன்று வயதிற்குள் வளர்ந்து விடும். மூளை வளரும் காலகட்டத்தில் அபார வளர்ச்சிக்கு (Brain’s fast expansion) ஈடு கொடுத்து மண்டை ஓடும் பெரிதாக உருவாக வேண்டும். மிகவும் கடினம் இல்லையா. இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வு தான் தனிதனி ஓடு அமைப்பு.

ஐந்து தனிதனி ஓடுகள் நம் மூளைப் பகுதியில் அமைந்துள்ளது. அனைத்தும் மென்மையாக எளிதில் விரிவடையக் கூடிய வகையில் சவ்வினால் இணைக்கப்பட்டுள்ளது. 

மூளையின் வேகமான வளர்ச்சிக்கு ஈடு தரும் விதத்தைத்தான் நாம் பொதுவாக உச்சிக் குழி என்கிறோம். இது உச்சந்தலையில் மட்டும் இருப்பதில்லை. ஓடுகள் சேரும் அனைத்து இடத்திலும் உள்ளது.

இந்த சவ்வு போன்ற அமைப்பு மண்டை ஓடினை விட கொஞ்சம் பலம் குறைந்ததாக உள்ளது. இந்த சவ்வு குழந்தைகளுக்கு தலைப் பகுதிகளில் அடி படாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது.

தாயின் கருவறையில் இருக்கும்போது குழந்தையின் மண்டையோட்டு எலும்புகள் முழு வளர்ச்சி அடையாது. பிரசவத்தில் குழந்தை எளிதாக வெளிவருவதற்கான இயற்கையின் ஏற்பாடுதான் இது.

முன், பின், நெற்றிப்பகுதி எலும்புகள் ஒன்றுசேரும் இடம் என்பதால் உச்சிக் குழி மென்மையாக இருக்கிறது.

பேதி, வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படும்போது, உச்சிக்குழி நன்றாக அமுங்கியிருப்பதை காணலாம்.

பொதுவாக டயமன்ட் வடிவத்தில் இருக்கும் உச்சிக்குழியானது ஒரு வயது அல்லது ஒன்னரை வயதுக்குள் எலும்புகளால் மூடப்பட்டுவிடும்.

குழந்தையின் உச்சிக்குழி மென்மையாக இருந்தாலும், அந்த இடத்தில் தோல் நன்றாகவே மூடியிருக்கும் என்பதால் தாய்மார்கள் அச்சம் அடைய வேண்டாம். உச்சிக்குழியில் ஏதேனும் அசாதாரணமான மாற்றம் தென்பட்டால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.

அது தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளிவரும் போது தாய்க்கு இலகுவாக இருக்கவும், குழந்தையின் தலை விரைவாக தாயின் பிரசவத்தில் இலகுவாக, எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வெளிவரவும் குழந்தையின் மண்டை ஓடு முழுமையாக வளர்ச்சியடையாமல் இறைவன் படைத்துள்ளான். கொஞ்ச நாட்களில் அது முழுமையாக வளர்ச்சியடைந்து விடும்.