தொடர்ந்து வெள்ளரிக்காய் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

51
விளம்பரம்

வெள்ளரிக்காயில் உள்ள ஸ்டேரோல் என்ற பொருள் அடங்கியுள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவும். மிகக் குறைந்த விலையில் அனைவராலும் வெள்ளரிக்காயை வாங்கி சாப்பிட முடியும். இயற்கை கொடுத்த அற்புற படைப்பில் கோடைக்காலத்தில் மக்களின் உடலையும், தாகத்தையும் தணிக்க அற்புத பொருளாகும்.

வெள்ளரிக்காயில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை அடங்கியுள்ளது. இது இரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவி செய்கிறது.

விளம்பரம்

சிலிகா என்ற அற்புதமான கனிமம் வெள்ளரிக்காயில் உள்ளதால், அவை நகங்கள் மற்றும் முடியை பளபளப்பாகவும் திடமாகவும் வைத்திருக்கும். மேலும் அதிலுள்ள சல்பரும், சிலிகாவும் முடியின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கும். மேலும் தசை இணைப்புகளை திடமாக்கி மூட்டு ஆரோக்கியத்துக்கு துணையாக நிற்கும்.

வெள்ளரிக்காயை கேரட் ஜூஸ் உடன் சேர்த்து பருகும் போது, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு குறைவதால் கீல்வாதத்திற்கும் நிவாரணம் கிடைக்கும்.

உடலில் உள்ள யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க வெள்ளரிக்காய் உதவுவதால், அவை சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

வெள்ளரிக்காயின் நன்மைகள்

 • வெள்ளரிக்காய் சாறு ஈறுகளில் இருக்கும் நோய்களை சரியாக்கும்.
 • வெள்ளக்காய் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கும்.
 • வெயில் காலத்தில் உடலின் எதிர்ப்பு சக்தி மண்டலம் அதிக வலுவாக இருத்தல் வேண்டும். இல்லையெனில், எண்ணற்ற நோய்களின் கூடாரமாக நமது உடல் மாறி விடும்.
 • உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற மிக சிறந்த வழி வெள்ளரி காய் தான்.
 • உடலில் நீச்சத்து குறைபாடு ஏற்பட்டால் மரணம் கூட நேரலாம். தினமும் வெயில் காலத்தில் சாப்பிட்டு வந்தால் நீர்சத்து அதிகரிப்பு முதல் இரத்தம் சுத்திகரிப்பு வரை சீராக நடைபெறும்.
 • நார்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை அதிக அளவில் வெள்ளரிக்காயில் இருப்பதால் உடலுக்கு வலு சேர்க்கும்.
 • உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள வெயில் காலங்களில் தினமும் 1 வெள்ளரிக்காய் சாப்பிட்டு வாருங்கள்.
 • மற்ற காலங்களை விடவும் வெயில் காலத்தில் நமது உடலானது மிக விரைவிலே சோர்வு அடைந்து விடும்.
 • உடலுக்கு உடனடி ஆற்றலை தருவதற்கு வெள்ளரிக்காய் ஒன்றே போதும். மேலும், மூளையின் திறனையும் சுறுசுறுப்பாக வைக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.
 • வயிற்று பகுதியில் உற்பத்தி ஆக கூடிய எண்ணற்ற அளவிலான வெப்பத்தை குறைக்க வெள்ளரி காய் சாப்பிட்டாலே போதும். வெயில் காலத்தில் அதிக அளவிலான வெள்ளரி காய் சாப்பிட்டால் உடல் முழுக்க வெப்பம் தணிய வாய்ப்பு உள்ளது.
 • வெள்ளரிக்காய் கண் எரிச்சல், கரு வளையங்கள் போன்றவற்றை குணப்படுத்தும்.
 • என்றும் இளமையாக இருக்க முகத்தின் அழகையும் பாதுக்காக்க வெள்ளரிக்காய் பெரிதும் பயன்படுகிறது.
 • சிலிகா வெள்ளரிக்காயில் அதிகமாக உள்ளதால் முடிகள் செழித்து வளர இது உதவி செய்யும்.
 • வெள்ளரிக்காயை கை மற்றும் கால் பகுதிகளில் தடவி வந்தால் தோல் மென்மையாகும்.
விளம்பரம்
முந்தைய கட்டுரைவாக்காளர் பெயர் பட்டியலைத் திருத்தும் பணிகள் ஆரம்பம்
அடுத்த கட்டுரைபிரித்தானியாவில் பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ள புதிய அதிகாரம்!