கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

சீன வுஹான் நகரில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80ஆக உயர்ந்துள்ளது.

சுமார் 3000 பேர் வரை இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதனை அடுத்து வுஹான் நகரில் இருந்து ஏனைய இடங்களுக்கு பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட நகரை சீன பிரதமர் லி கேயுவாங் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

வுஹான் நகர் அமைந்துள்ள கியூபெக் மாகாணத்தில் வசிக்கும் 11 மில்லியன் மக்களின் பயணங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதிகளில் அவசியமற்ற வகையில் வாகனங்களை பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு அடுத்த படியாக அமெரிக்கா, அவுஸ்திரேலியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது.

எனினும் இறப்புக்கள் எவையும் பதிவாகவில்லையெனவும், இதேவேளை வுஹான் நகரின் புதுவருட விடுமுறை தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.