கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக இன்றைய நிலவரப்படி பலியானோரின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில்,வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது.

இதன் காரணமாக நேற்றைய நிலவரப்படி கொரோனா வைரஸினால் 107 பேர் பலியாகியிருந்ததுடன்,இன்றைய தினம் 170 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் சீனா முழுவதும் 7000 பேர் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையிலும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான சீனப் பெண் அடையாளம் காணப்பட்டார்.

இலங்கையிலும் இந்த வைரஸ் தாக்கம் தீவிரம் அடையும் என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டிருந்த நிலையில், குறித்த பெண்மணியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.