இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாட்டு அரசு மத்திய அரசினை வலியுறுத்தும் என ஆளுனர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது

முதல் நாளான இன்று ஆளுனர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது அந்த உரையில பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள உள்ளன.

இந்தநிலையில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு மத்திய அரசினை வலியுறுத்தும் என்றும், தமிழக மக்கள், எந்த ஒரு மதத்தையோ அல்லது சமயத்தையோ பின்பற்றினாலும், அவர்கள் அனைவரின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்றைய நிலவரப்படி, 17 மீனவர்கள் மட்டுமே இலங்கை அரசின் சிறையில் உள்ளதாகவும், அவர்களையும் விரைவில் விடுவிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றதாகவும் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.