இந்தியா முடங்குகிறது: ஊரடங்கு அமுல்

இந்தியாவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றி மக்கள் அனைவரையும் வீடுகளிலேயே இருக்குமாறு இந்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸினால் இதுவரை 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு  தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

அதன் ஒரு கட்டமாகவே எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.