இந்தியாவில் 20 பேரின் உயிரை பறித்தது கொரோனா…!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 753 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இந்தியாவில் கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் இந்தியர்கள் 677 பேருக்கும், வெளிநாட்டவர்கள் 47 பேருக்கும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, 67 பேர் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 பேர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதுடன், 668 பேருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தமிழ்நாட்டில் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.