நித்யானந்தா இருப்பிடம் தொடர்பாக உரிய தகவல்களை அளிக்குமாறு மாநில அரசு மற்றும் கர்நாடக பொலிஸுக்கு பெங்களூர் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நித்யானந்தா மீதான கற்பழிப்பு வழக்கை பெங்களூர்- ராம் நகரிலுள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் இருந்து மாற்றக் கோரி அவரது முன்னாள் சீடரான லெனின் கருப்பன் பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் அவரது சட்டத்தரணி ஊடாக மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கை நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு உட்படுத்திய நீதிபதி ஜி.நரேந்திர, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நீதிமன்ற விசாரணைகளை தவிர்த்து வரும் நித்யானந்தா இருப்பிடம் தொடர்பாக உரிய தகவல்களை அளிக்குமாறு மாநில அரசு மற்றும் கர்நாடக பொலிஸுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளார்