தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஒருபோதும் இடமில்லை

0

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஒருபோதும் இடமில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற வீரமாமுனிவரின் 340ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.முக.அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை நிச்சயம் கைப்பற்றும் என்றும் தெரிவித்தார் .