மகாராஷ்டிராவில் அனைத்து மதவழிபாட்டு தலங்களும் நாளை திறப்பு

8

நாளை முதல் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் மீண்டும் திறப்பதாக அம்மாநில அரசு நேற்று அறிவித்தது.

மேலும் முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் அனைத்து கோவிட்-19 விதிமுறைகளும் மத வழிபாட்டு தலங்களில் நடைமுறையில் இருக்கும் என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு அறிவித்துள்ளதோடு கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு பிறகு மகாராஷ்டிராவில் உள்ள மத வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்படுகிறமை குறிப்பிடதக்கது