ஜனவரியில் புதிய கட்சி – ரஜினி

10

ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சித் தொடங்கப் போவதாகவும், அதற்கான தேதியை டிசம்பர் 31 ஆம் திகதி அறிவிக்க இருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என்று தெரிவித்திருக்கும் ரஜினிகாந்த், மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம் என்றும், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்லை என்றும் தெரிவித்தார் .

கடந்த வாரம், மாவட்ட வாரியாக நிர்வாகிகளை சந்தித்து, அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்திய ரஜினி, எவ்வளவு விரைவாக அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.