ரஜினி முதல்வர் வேட்பாளர் கிடையாது? கட்சியின் மேற்பார்வையாளர் தமிழவிமணியன் பதில்

22

ரஜினி கட்சி துவங்கினாலும், முதல்வர் வேட்பாளராக இருக்கமாட்டேன் என்று உறுதியாக இருப்பதாக கட்சியின் மேற்பார்வையாளர் தமிழவிமணியன் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி துவங்குவதாகவும், வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் திகதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் திகதி அரசியலுக்கு வருவதாக உறுதியளித்தேன். அதை நிச்சயம் செய்வேன் என தெரிவித்திருந்தார். அதே போன்று தலைவர் கட்சி குறித்து அறிவிப்பை கூறிவிட்டதாக கூறி, ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதற்கிடையில், கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை ரஜினி அறிவித்தார்.

இந்நிலையில், தற்போது கட்சி தொடங்கினாலும் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என்பதில் ரஜினி உறுதியுடன் இருப்பதாக அவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கு விருப்பம் இல்லை என்றாலும், அவர் வேட்பாளராக இருப்பார் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். ரஜினியால் மட்டுமே வெளிப்படையான, ஊழல் இல்லாத நிர்வாகத்தை உருவாக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.