உலக சாதனை படைக்க கொழும்பில் திரளும் இரட்டையர்கள்

அதிகமான இரட்டையர்களை ஒன்றிணைத்து கிண்ணஸ் உலக சாதனையை ஒன்றை படைக்க இலங்கை இரட்டையர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

மேலும் இந்நிகழ்வில் பங்குக்கொள்ள விரும்பும் இரட்டையர்களை, பிரதேச செயலாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட பிறப்பு சான்றிதழுடனும் தேசிய அடையாள அட்டையின் பிரதி ஒன்றுடன்  வருகை தருமாறும் அந்த சங்கம் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் 18 வயதுக்கும் மேற்பட்ட இரட்டையர்கள், தமது தாயின் அல்லது தந்தையின் தேசிய அடையாள அட்டையின் பிரதி ஒன்றை கொண்டுவர வேண்டும் எனவும் அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் புகழை உலகுக்கு கொண்டுச் செல்ல நாடு முழுவதும் உள்ள இரட்டையர்கள் முன்வரவேண்டும் என இலங்கை இரட்டையர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக தந்தெனிய தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.